/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவியரிடம் ஆசிரியர் 'பேட் டச்' பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
/
மாணவியரிடம் ஆசிரியர் 'பேட் டச்' பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
மாணவியரிடம் ஆசிரியர் 'பேட் டச்' பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
மாணவியரிடம் ஆசிரியர் 'பேட் டச்' பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
ADDED : ஜன 29, 2025 01:19 AM
மாணவியரிடம் ஆசிரியர் 'பேட் டச்' பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
குமாரபாளையம்,: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி ஆசிரியர் ஒருவர், மதிய இடைவேளையில், ஏழு, எட்டாம் வகுப்பு மாணவியரை, தன் கை, கால்களை அழுத்திவிடுமாறு கூறுவதாகவும்; மாணவியரை, தொடக்கூடாத இடங்களில் தொடுவதாகவும், தங்களது பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட மாணவியர் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், நேற்று காலை பள்ளி முன் திரண்டனர்.குமாரபாளையம் போலீசார் மற்றும் தாசில்தார் சிவக்குமார் ஆகியோர், பள்ளியில் விசாரணை நடத்த சென்றனர். அப்போது, அந்த ஆசிரியர் விடுப்பில் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து, மாணவியரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். பின், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் கூறிச்சென்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் கூறியதாவது: வீரப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர், மாணவியரிடம் விதிமீறி நடந்ததாக புகார் வந்தது. இதையடுத்து, தாசில்தார் சிவகுமார், மாவட்ட கல்வி அலுவலர் பச்சமுத்து, குழந்தைகள் நல அலுவலர், சைல்டுலைன் அமைப்பினர், போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினோம். இதுகுறித்து அறிக்கையை, மாவட்ட கலெக்டருக்கு சமர்ப்பித்துள்ளோம். அவரது உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.