/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் பஞ்சாயத்தை இணைக்க அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு

ADDED : பிப் 01, 2025 12:44 AM
பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் பஞ்சாயத்தை இணைக்க அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு
பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி மன்ற கூட்டம், நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
இதில், தி.மு.க., - அ.தி.மு.க., - ம.தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் துவங்கியதும், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 'பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் பஞ்சாயத்து பகுதிகளை இணைக்க, சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், களியனுார் பஞ்சாயத்தையும் இணைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. களியனுார் பஞ்சாயத்தை, நகராட்சியுடன் இணைக்க விடமாட்டோம்' என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு நகராட்சி தலைவர் செல்வராஜ், ''பஞ்சாயத்து பகுதிகளை நகராட்சியுடன் இணைத்தால் தான் பல்வேறு திட்டங்கள் நமக்கு கிடைக்கும். அதனால், பஞ்சாயத்துகளை, பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் இணைத்து, சிறந்த நகராட்சியாக மாற்றி காட்டுவேன்,'' என, அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு சவால் விடுத்து பேசினார். இதனால் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.