/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வானவில் மன்ற கருத்தாளருக்கு மாவட்ட மீளாய்வு, பயிற்சி முகாம்
/
வானவில் மன்ற கருத்தாளருக்கு மாவட்ட மீளாய்வு, பயிற்சி முகாம்
வானவில் மன்ற கருத்தாளருக்கு மாவட்ட மீளாய்வு, பயிற்சி முகாம்
வானவில் மன்ற கருத்தாளருக்கு மாவட்ட மீளாய்வு, பயிற்சி முகாம்
ADDED : பிப் 01, 2025 12:48 AM
வானவில் மன்ற கருத்தாளருக்கு மாவட்ட மீளாய்வு, பயிற்சி முகாம்
நாமக்கல்,: அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், 'வானவில் மன்றம்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், 6 முதல், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியலையும் கணிதத்தையும் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மாவட்ட மீளாய்வு மற்றும் பயிற்சி முகாம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் உறிஞ்சும் உள்ளாடையில், நீர் உறிஞ்சுவதற்கு காரணமான வேதி வினையை விளக்கி செய்முறையாக செய்து காண்பிக்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர் ராஜா, வானவில் மன்ற பயிற்சியாளர்
குணசேகர், கருத்தாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.