/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன்கோவிலில் சிவராத்திரி விழா கொடியேற்றம்

ADDED : பிப் 18, 2025 12:56 AM
ராசிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன்கோவிலில் சிவராத்திரி விழா கொடியேற்றம்
ராசிபுரம்:ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சிவராத்திரியையொட்டி திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு மகா சிவராத்திரி விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கொடியேற்ற நிகழ்ச்சியில், கைலாசநாதர் கோவில் அர்ச்சகர்கள் உமாபதி சிவாச்சாரியார், மது சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நடராஜர் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன், மேள தாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அங்காள பரமேஸ்வரி சேவா சங்கம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரியையொட்டி, பஞ்சலிங்க பக்தர்கள் குழு சார்பில் மூன்றாம் ஆண்டாக இயல், இசை, நாடக திருவிழா நடக்கிறது. முன்னதாக கைலாசநாதர் திருக்கோவில் பள்ளியறை பூஜை நித்தியபணி இசைக்குழுவினர் சார்பில் கைலாயவாத்திய இசைக்குழு சார்பில் ராசை திருப்புகழ் வாசித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.