/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வானவில் மன்ற போட்டியில் சிறப்பிடம்அரசுப்பள்ளி மாணவர் கலெக்டரிடம் வாழ்த்து

ADDED : பிப் 19, 2025 01:43 AM
வானவில் மன்ற போட்டியில் சிறப்பிடம்அரசுப்பள்ளி மாணவர் கலெக்டரிடம் வாழ்த்து
நாமக்கல்:தமிழகத்தில், அரசு பள்ளிகளில் கணக்கு, அறிவியல் பாடங்களை, மாணவர்கள் தாங்களே பரிசோதனை செய்து, கற்றலை மேம்படுத்துவதற்காக, 2022ல், 'வானவில் மன்றம் நடமாடும் அறிவியல் ஆய்வகம்' தொடங்கப்பட்டது. இதற்காக, 11.69 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்து, மாநில, தென்னிந்திய அளவில் கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், கடந்த, 12ல், மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடந்தது.அதில், நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஒன்றியம், வெங்கமேடு பஞ்., நடுநிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு பயிலும் மாணவன் வசந்த், கழிவுநீர் மேலாண்மை திட்டத்தில், இயற்கை முறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வது குறித்த செயல்திட்டத்தை காட்சிப்
படுத்தினார். அதில், மாணவர் வசந்த், மாநில அளவில், 8ம் இடம் பிடித்து, வெளிநாடு செல்ல தேர்வாகியுள்ளார்.இந்நிலையில், வானவில் மன்ற போட்டியில், மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர் வசந்த், நாமக்கல் கலெக்டர் உமாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பெற்றோர், ஆசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.