/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொண்டை ஊசி வளைவில்லாரி கவிழ்ந்து விவசாயி பலி
/
கொண்டை ஊசி வளைவில்லாரி கவிழ்ந்து விவசாயி பலி
ADDED : பிப் 20, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொண்டை ஊசி வளைவில்லாரி கவிழ்ந்து விவசாயி பலி
சேந்தமங்கலம்:கொல்லிமலை யூனியன், ஆரியூர் நாடு பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பால்ராஜ்; இவர், நேற்று முன்தினம், லாரியில் கூந்தப்பனையை ஏற்றிக்கொண்டு அடிவாரத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அவருடன், அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி, 60, என்ற விவசாயியும் வந்தார்.
ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியை ஓட்டி வந்த பால்ராஜ் காயமடைந்தார்.
லாரியின் பின்னால் உட்கார்ந்து வந்த விவசாயி முத்துசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, வாழவந்தி நாடு போலீசார் விசாரிக்கின்றனர்.

