/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுார் அரசு மகளிர் பள்ளியில்திருவள்ளுவர் சிலைக்கு பூமி பூஜை
/
மோகனுார் அரசு மகளிர் பள்ளியில்திருவள்ளுவர் சிலைக்கு பூமி பூஜை
மோகனுார் அரசு மகளிர் பள்ளியில்திருவள்ளுவர் சிலைக்கு பூமி பூஜை
மோகனுார் அரசு மகளிர் பள்ளியில்திருவள்ளுவர் சிலைக்கு பூமி பூஜை
ADDED : பிப் 20, 2025 01:36 AM
மோகனுார் அரசு மகளிர் பள்ளியில்திருவள்ளுவர் சிலைக்கு பூமி பூஜை
மோகனுார்:மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், திருவள்ளுவர் சிலை அமைப்புக்குழு சார்பில், திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
தலைமையாசிரியர் கலைச்செல்வி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் டவுன் பஞ்., கவுன்சிலர் நவலடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மோகனுார் டவுன் பஞ்., முன்னாள் தலைவர் உடையவர், பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இங்கு, ஐந்தடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு, அதன் மேல், மூன்றரை அடி உயரத்தில் திருவள்ளுவர் அமர்ந்த நிலையில், சிலை அமைக்கப்படுகிறது. அதன் மொத்த செலவு, நான்கு லட்சம் ரூபாய். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், திருவள்ளுவர் சிலை அமைப்பு குழுவினர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.