/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர்பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
/
குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர்பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர்பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர்பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
ADDED : பிப் 23, 2025 02:03 AM
குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர்பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
நாமக்கல்:'குழந்தைகள் நலக்குழுவின் தலைவர், உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2015ம் ஆண்டின், இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகள்படி, நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு, தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதையடுத்து, தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நலக்குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர், உறுப்பினர்கள், அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இப்பதவி அரசு பணி அல்ல. குழந்தை
உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித உடல் நலம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றும், குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது, ஏழு ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும்.
மேலும், குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித உடல் நலம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதாவது பட்டம் பெற்று தொழில்புரிபவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை, 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலகம், 3வது தளம், அறை எண்.320, நாமக்கல்--637003' என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது துறை சார்ந்த இணையதள முகவரியிலிருந்து https://dsdcpimms.tn.gov.in பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினருக்கான விண்ணப்பம் தனித்தனியாக அனுப்ப வேண்டும். தகுதிவாய்ந்த நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் மார்ச், 6, மாலை, 5:00 மணிக்குள், 'இயக்குனர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.