/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கிட்ஸ் பள்ளி மாநில கராத்தே போட்டியில் சாதனை
/
ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கிட்ஸ் பள்ளி மாநில கராத்தே போட்டியில் சாதனை
ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கிட்ஸ் பள்ளி மாநில கராத்தே போட்டியில் சாதனை
ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கிட்ஸ் பள்ளி மாநில கராத்தே போட்டியில் சாதனை
ADDED : மார் 08, 2025 01:19 AM
ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கிட்ஸ் பள்ளி
மாநில கராத்தே போட்டியில் சாதனை
ப.வேலுார்,:
ப.வேலுார் தாலுகா, சக்ரா நகரில் அமைந்துள்ள ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கிட்ஸ் பள்ளி மாணவ, மாணவயிர், கராத்தே போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில், 2வது மாநில அளவிலான 'மேட்ரீயல் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப்--2025' கராத்தே போட்டி, கரூரில் நடந்தது. போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கிட்ஸ் பள்ளி மாணவ, மாணவியர், 35 பேர் கலந்து கொண்டனர்.
போட்டியில், 10 பேர் முதலிடம், 10 பேர் இரண்டாமிடம், 15 பேர் மூன்றாமிடம் பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) ஜோதி, கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும், வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் அருள், சேகர், சம்பூரணம், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.