/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெண்களின் வளர்ச்சி தி.மு.க., ஆட்சியின் புரட்சிஅமைச்சர் மதிவேந்தன் பெருமிதம்

ADDED : மார் 08, 2025 01:26 AM
பெண்களின் வளர்ச்சி தி.மு.க., ஆட்சியின் புரட்சிஅமைச்சர் மதிவேந்தன் பெருமிதம்
நாமக்கல்:''பெண்கள் வளர்ச்சி என்பது, தி.மு.க., ஆட்சியின் புரட்சி ஆகும்,'' என, தாலிக்கு தங்கம் வழங்கும் நிழ்ச்சியில், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மறறும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், 165 பயனாளிகளுக்கு, 1.74 கோடி ரூபாய் மதிப்பில், தாலிக்கு தங்கம் மற்றும் திருமணநிதி உதவி வழங்கி பேசியதாவது:
பெண்கள் வளர்ச்சி என்பது, தி.மு.க., ஆட்சியின் புரட்சி ஆகும். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்த, 35 பெண்களுக்கு, தலா, 25,000 ரூபாய் வீதம், 8.75 லட்சம் ரூபாய் திருமண நிதியுதவி, பட்டம், பட்டயம் படித்த, 130 பெண்களுக்கு, 50,000 ரூபாய்- வீதம், 65 லட்சம் ரூபாய் திருமண நிதியுதவி, 165 பெண்களுக்கு, தலா, 8 கிராம் வீதம், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், 1,320 கிராம் தங்கம் என, மொத்தம், 1.74 கோடி ரூபாய் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கும் தங்கம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பேசுகையில், ''நாமக்கல் மாவட்டத்தில், 'புதுமைப்பெண்' திட்டத்தில், 15,725 மாணவியர் பயன்பெறுகின்றனர். தமிழக முதல்வர் தலைமையிலான ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. இந்தியாவில், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டத்தை நிறைவேற்றிய முதல்வர் கருணாநிதி,'' என்றார்.
அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.