தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ திருச்செங்கோட்டில் இரு இடங்களில்மக்கள் சாலை மறியல் போராட்டம்

திருச்செங்கோட்டில் இரு இடங்களில்மக்கள் சாலை மறியல் போராட்டம்

திருச்செங்கோட்டில் இரு இடங்களில்மக்கள் சாலை மறியல் போராட்டம்


ADDED : மார் 14, 2025 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2025 01:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்செங்கோட்டில் இரு இடங்களில்மக்கள் சாலை மறியல் போராட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, சூரியம்பாளையம் பகுதியில் மழை நீரோடு கழிவுநீர் கலந்து, துர்நாற்றம் வீசுவதாக கூறி நுாற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோட்டில், நேற்று முன்தினம், 12 மி.மீ., மழை பெய்தது. மழை நீருடன், கழிவு நீர் கலந்து ஊருக்குள் புகுந்ததால், பாம்புகள், நாய்கள், எலிகள் செத்து மிதந்து சூரியம்பாளையம் குடியிருப்பு பகுதிக்குள் வந்து விட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், திருச்செங்கோடு - ஆனங்கூர் ரோட்டில் தலைமை தபால்நிலையம் அருகே சாலை மறியல் செய்தனர்.

திருச்செங்கோடு நகராட்சி கமிஷனர் அருள், பொறியாளர் சரவணன், டி.எஸ்.பி., கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் பேச்சு

வார்த்தை நடத்தினர். வெளிப்பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் மற்றும் பகுதி மக்கள் பயன்படுத்திய கழிவுநீர், சூரியம்பாளையம் பகுதி வழியாக செல்லாமல் தடுப்பதாக, அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை

யடுத்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மறியலால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல், கழிவுநீர் வருவதை கட்டுப்படுத்த கோரி, ஈரோடு ரோட்டில் சந்தைபேட்டை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இரண்டு நாளில் பேசி சரியான முடிவு எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இப்பகுதியிலும், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us