/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தரமற்ற உணவு பொருள் விற்பனை செய்த பேக்கரிக்கு அபராதம்
/
தரமற்ற உணவு பொருள் விற்பனை செய்த பேக்கரிக்கு அபராதம்
தரமற்ற உணவு பொருள் விற்பனை செய்த பேக்கரிக்கு அபராதம்
தரமற்ற உணவு பொருள் விற்பனை செய்த பேக்கரிக்கு அபராதம்
ADDED : மார் 14, 2025 02:02 AM
தரமற்ற உணவு பொருள் விற்பனை செய்த பேக்கரிக்கு அபராதம்
ராசிபுரம்:தரமற்ற உணவு பொருட்களை, விற்பனை செய்த பேக்கரிக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
கொல்லிமலையை சேர்ந்தவர் யுவராஜ், 30. இவர் தன் நண்பர்களுடன் கடந்த, 8ம் தேதி காளப்பநாயக்கன்பட்டி அடுத்த திருமலைப்பட்டி பிரிவு சாலையில் உள்ள, பிவிஎம் பேக்கரியில் மசால் பூரி வாங்கி சாப்பிட்டனர். அதில் புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதை சுட்டிக்காட்டிய யுவராஜை, பேக்கரியில் வேலை செய்தவர்கள் மிரட்டி அனுப்பினர்.
யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஆர்டர் செய்த மசால் பூரிக்கு, 90 ரூபாய் பணத்தை போன் பே மூலம் செலுத்திவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து யுவராஜ், நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் மாநில உணவு பாதுகாப்பு துறைக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் தலைமையிலான அதிகாரிகள்,
பேக்கரியில் ஆய்வு செய்தனர். அப்போது, பேக்கரியில் உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததையும், தரமற்ற உணவு கலர் பொடிகள் பயன்படுத்துவதையும் கண்டறிந்தனர். தரமற்ற பொடிகள் மற்றும், 1.2 கிலோ தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பேக்கரிக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
* பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்பு துறை சார்பாக ஒட்டமெத்தை, ஈக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் மற்றும் அதிகாரிகள் ஓட்டல், மளிகை கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூன்று கிலோ, காலாவதியான குளிர்பானங்கள், தின்பண்டங்கள், 6 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு கடைகளுக்கு தலா, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.