/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்மத்திய அரசை குறை கூறுவது முறையல்ல'

ADDED : மார் 15, 2025 02:47 AM
'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்மத்திய அரசை குறை கூறுவது முறையல்ல'
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் முத்துக்காபட்டியில், புதிய தமிழகம் கட்சி சார்பில் கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. அக்கட்சியின் நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இன்று(நேற்று) சட்டசபையில், 300 பக்கங்களுக்கு மேல் நிதிநிலை அறிக்கை படித்துள்ளனர். முலாம் பூசப்பட்ட ஒரு அறிக்கையாகத்தான் அதை பார்க்க முடிகிறது. 2026 தேர்தலை மையமாக வைத்தே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஏழ்மையில் உள்ள மக்களுக்கான எந்தவித திட்டமும் பட்ஜெட்டில் இல்லை.
மத்திய அரசை, குறை கூறுவதற்கு முன்பாக, தி.மு.க., தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை. அப்படி இருக்கையில் மத்திய அரசை குறை கூறுவது ஏற்புடையது அல்ல. 'மக்களின் தலைக்கு மேல் கத்தி' என்பதை உணர்ந்து எல்லா கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது என் வேண்டுகோள். 2026-ல் ஆட்சி மாற்றம் என்பது இலக்காக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.