/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழகம் முழுவதும் தி.மு.க., ஆட்சிக்குஎதிரான அலை வீசுகிறது: மாஜி அமைச்சர்

ADDED : மார் 23, 2025 01:23 AM
தமிழகம் முழுவதும் தி.மு.க., ஆட்சிக்குஎதிரான அலை வீசுகிறது: மாஜி அமைச்சர்
திருச்செங்கோடு:திருச்செங்கோடு அருகே, எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம், குமாரமங்கலத்தில் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில், முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
அ.தி.மு.க., பலமான கூட்டணியை அமைக்கும். தி.மு.க., ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் எடுத்து சொல்லி, பாக முகவர்களாக இருக்கும் நீங்கள் முழுமையாக உழைத்தால் போதும். கடந்த தேர்தலில் திருச்செங்கோட்டில், 1,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற நாம், இந்த முறை அதிகப்படியான ஓட்டுகளில் வெற்றி பெறுவோம். தமிழகம் முழுவதும் தி.மு.க., ஆட்சிக்கு எதிரான அலை வீசுகிறது. 2026 தேர்தலில் அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெற்று, இ.பி.எஸ்., முதல்வராவது நிச்சயம். இவ்வாறு பேசினார்.
பூத் கமிட்டி உறுப்பினர்கள் குறித்த ஆய்வை, பூத் கமிட்டி பொறுப்பாளர் கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு ஆய்வு செய்து பேசினார். பரமத்தி எம்.எல்.ஏ., சேகர், மாவட்ட ஜெ.,பேரவை செயலர் வக்கீல் சந்திரசேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி முரளி, மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் பரணிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.