/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீயணைப்பு நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளதால் மக்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஏப் 10, 2025 01:25 AM
தீயணைப்பு நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளதால் மக்கள் ஆர்ப்பாட்டம்
ப.வேலுார்:பரமத்தி வேலுார் தாலுகாவில் பரமத்தி, கபிலர்மலை என, இரு ஒன்றியங்கள், ப.வேலுார், பரமத்தி, வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனுார் என, ஐந்து டவுன் பஞ்சாயத்துகள், 40 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. ஜேடர்பாளையம், கபிலர்மலை, பிலிக்கல்பாளையம், அண்ணா நகர் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகள், 100க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகின்றன. சில நேரம் ஆலை கொட்டகைகளில் தீ விபத்து ஏற்படுகிறது. தீயணைப்பு வாகனம் வர கால தாமதம் ஏற்பட்டு, முற்றிலும் எரிந்து நாசமாகிறது.
இதனால், கடந்த, 2022ல் ப.வேலுார் தொகுதிக்கு தீயணைப்பு நிலைய அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கபிலர்மலை அடுத்த பெரியசோலிபாளையம் பஞ்., சிறுகிணத்துப்பாளையம் கிராமத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க இடம்தேர்வு செய்யப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்காமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டி பாதிக்கப்பட்ட பிலிக்கல்பாளையம் கிராம மக்கள், நேற்று ப.வேலுார் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, 'தீயணைப்பு நிலையம் அமைக்க மீண்டும் காலதாமதம் ஆனால், கிராம மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்' என கூறினர்.