/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., முதன்மை தேர்வில் சாதனை
/
பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., முதன்மை தேர்வில் சாதனை
பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., முதன்மை தேர்வில் சாதனை
பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., முதன்மை தேர்வில் சாதனை
ADDED : மே 20, 2025 02:37 AM
நாமக்கல், பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவ, மாணவியர், 2025ம் ஆண்டு ஜே.இ.இ., முதன்மை தேர்வு முடிவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், மாணவி நிதர்சனா, 99.91 சதவீதம், மாணவர்கள் சுசிர் குமரவேல், 99.90, சித்தரஞ்சன், 99.86, திவேஸ் வேலவன், 99.83, தேவதர்சன், 99.66 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். 40 மாணவர்கள்,
90 சதவீதத்திற்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், 27 மாணவர்கள், 95 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ளனர். பாவை வித்யாஸ்ரம் பள்ளி, ஆகாஷ் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், பள்ளிக்கல்வி படித்து கொண்டிருக்கும்போதே, நுழைவுத்தேர்வு பயிற்சி, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., ஒலிம்பியாட் போன்ற நுழைவு தேர்வுகளில் வெற்றிபெற்று, நாட்டின் தலைச்சிறந்த கல்லுாரிகளில் படிக்க வழிவகை செய்கிறது. சாதனைபுரிந்த மாணவ, மாணவியரை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் நடராஜன், தாளாளர் மங்கைநடராஜன், இயக்குனர்(சேர்க்கை) வழக்கறிஞர் செந்தில், பாவை வித்யாஸ்ரம் பள்ளி இயக்குனர் சதீஸ், முதல்வர் ரோஹித், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.