/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி - சரபங்கா - திருமணிமுத்தாறு - அய்யாறு வாய்க்கால் திட்டத்தை செயல்படுத்த ஆர்ப்பாட்டம்

ADDED : ஆக 20, 2024 02:57 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், பத்து ரூபாய் இயக்கம் சார்பில், காவிரி - சரபங்கா - திருமணிமுத்தாறு - அய்யாறு கால்வாய் இணைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.
தற்போது, கடலில் கலந்து வீணாகும் மேட்டூர் அணையின் உபரி நீரை, நாமக்கல் மாவட்ட ஏரிகளில் நிரப்பும் வகையில், காவிரி - சரபங்கா - திருமணிமுத்தாறு - அய்யாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். காவிரி ஆறு மற்றும் பல ஆறுகளிலும், 5 கி.மீ.,க்கு ஒரு தரமான தடுப்பணை கட்ட வேண்டும்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், ஓடை நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கலக்கும் சாயப்பட்டறை கழிவு உள்ளிட்ட ரசாயன கழிவுகள், சாக்கடை நீரை தடுக்கவும், சட்ட விரோத சாயப்பட்டறைகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.