/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் கலை நிகழ்ச்சி
/
துாய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் கலை நிகழ்ச்சி
துாய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் கலை நிகழ்ச்சி
துாய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் கலை நிகழ்ச்சி
ADDED : அக் 20, 2024 01:50 AM
துாய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் கலை நிகழ்ச்சி
குமாரபாளையம், அக். 20-
குமாரபாளையத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, நகராட்சி ஆணையர் கணேசன் தலைமையில் நடந்தது. கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் கொசு ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, குடிநீர் சிக்கனம், மரம் வளர்ப்பு, கால்நடைகள் பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை, காவேரி நகர், கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் உள்பட பல இடங்களில் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.