/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் கனமழையால் சாலையில் சரிந்து விழுந்த பாறைகள்
/
கொல்லிமலையில் கனமழையால் சாலையில் சரிந்து விழுந்த பாறைகள்
கொல்லிமலையில் கனமழையால் சாலையில் சரிந்து விழுந்த பாறைகள்
கொல்லிமலையில் கனமழையால் சாலையில் சரிந்து விழுந்த பாறைகள்
ADDED : டிச 03, 2024 01:19 AM
கொல்லிமலையில் கனமழையால்
சாலையில் சரிந்து விழுந்த பாறைகள்
நாமக்கல், டிச. 2-
வங்க கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் குறிப்பாக, கொல்லிமலையில் பெய்த கனமழையால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி ஆகியவற்றில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பலத்த காற்று வீசியதால் வனப்பகுதியில் இருந்த மரங்கள் சாய்ந்தன. கொல்லிமலையில் சோளக்காடு அருகே மூலசோலை கிராமத்தில், பாறைகள் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் நாமக்கல்லில் இருந்து ஒத்தகடை செல்லும் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் பாறைகளை அகற்றியதால், சிறிது நேரத்தில் போக்குவரத்து சீரானது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காலை, 6:00 மணி வரை, 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம் (மி.மீ.,ல்): எருமப்பட்டி, 30, குமாரபாளையம், 4, மங்களபுரம், 61.80, மோகனுார், 15, நாமக்கல், 45, ப.வேலுார், 11, புதுச்சத்திரம், 45, ராசிபுரம், 65, சேந்தமங்கலம், 45, திருச்செங்கோடு, 15, கலெக்டர் அலுவலகம், 24, கொல்லிமலை, 80.
அருவிகளில் குளிக்க தடை
நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. இந்த மலைக்கு, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது, 'பெஞ்சல்' புயல் காரணமாக கொல்லிமலையில் கனமழை பெய்து வருவதால், இங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள், நேற்றும், இன்றும் என, 2 நாட்கள் அருவிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.