/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விபத்தை ஏற்படுத்திய வேகத்தடைமாற்றி அமைக்கப்பட வேண்டும்
/
விபத்தை ஏற்படுத்திய வேகத்தடைமாற்றி அமைக்கப்பட வேண்டும்
விபத்தை ஏற்படுத்திய வேகத்தடைமாற்றி அமைக்கப்பட வேண்டும்
விபத்தை ஏற்படுத்திய வேகத்தடைமாற்றி அமைக்கப்பட வேண்டும்
ADDED : ஜன 10, 2025 01:25 AM
விபத்தை ஏற்படுத்திய வேகத்தடைமாற்றி அமைக்கப்பட வேண்டும்
பள்ளிப்பாளையம், : பள்ளிப்பாளையத்தில், ஒன்பதாம்படி பகுதியில் காவிரி ஆற்றின் புதிய பாலத்தின் முன், சில நாட்களுக்கு முன்பு உயரமான அளவில் வேகத்தடை அமைக்கப்பட்டது. கடந்த, 7 இரவு பவானி பகுதியை சேர்ந்த சத்தியானந்த், 28, என்பவர் டூவீலரில் வரும் போது, வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்தார். எனவே விபத்து ஏற்படுத்தும் வகையில், உயரமாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையை மாற்றி அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர் சரவணன் கூறுகையில்,'' உயரமாக அமைக்கப்பட்ட வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஒருவர் நிலை தடுமாறி விழுந்து இறந்துள்ளார். கார் சென்றால் வேகத்தடையில் உரசுகிறது. பாதுகாப்பு இல்லாத வேகத்தடையாக உள்ளது. இதை அகற்றி விட்டு சிறிய அளவில் வேகத்தடை அமைக்க வேண்டும். வேகத்தடைக்கு முன்புறம் எச்சரிக்கை பலகை, இரவில் ஒளிரும் விளக்கு வைக்க நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.