/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சந்தா தொகை பிரச்னை: ரயில்வேகூட்ஸ்செட்டில் போலீசார் விசாரணை
/
சந்தா தொகை பிரச்னை: ரயில்வேகூட்ஸ்செட்டில் போலீசார் விசாரணை
சந்தா தொகை பிரச்னை: ரயில்வேகூட்ஸ்செட்டில் போலீசார் விசாரணை
சந்தா தொகை பிரச்னை: ரயில்வேகூட்ஸ்செட்டில் போலீசார் விசாரணை
ADDED : ஜன 10, 2025 01:28 AM
நாமக்கல்,: நாமக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள கூட்ஸ் செட்டில், லாரி உரிமையாளகளுக்கு சந்தா தொகை கட்டுவதில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டத்திற்கு சரக்கு ரயில்கள் மூலம், கோழித்தீவன மூலப்பொருட்களான மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு, கம்பு போன்ற தானியங்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, கோதுமை போன்றவையும் வரத்தாகின்றன. ரயில்கள் மூலம் வரும் தானியங்கள் கோழித்தீவன ஆலைகளுக்கும், நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கும் லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு லோடு ஏற்ற வரும் லாரி ஒன்றுக்கு, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கம் சார்பில், 100 ரூபாய் வீதம் சந்தா வசூல் செய்யப்படுகிறது. இதற்கிடையே ரயில்வே கூட்ஸ் செட் அசோசியேசன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. எனவே, சந்தா செலுத்த மாட்டோம் என கூறினர். இதனால் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நாமக்கல் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில் வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர். அத்துடன் பிரச்னை தொடர்பாக ஆர்.டி.ஒ., முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.