/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மண் மாதிரி எடுக்க பண்ணைப்பள்ளி பயிற்சி
/
மண் மாதிரி எடுக்க பண்ணைப்பள்ளி பயிற்சி
ADDED : ஜன 29, 2025 01:19 AM
மண் மாதிரி எடுக்க பண்ணைப்பள்ளி பயிற்சி
ராசிபுரம், : ராசிபுரம் வட்டாரத்தில், வேளாண்மை துறையின் கீழ், 'அட்மா' திட்டத்தில் போடிநாயக்கன்பட்டி கிராமத்தில், 25 விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குனர் தனலட்சுமி தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை ஓய்வு பெற்ற பேராசிரியர் அப்பாவு, பயறு வகை பயிர்களின் தொழில்நுட்பங்களை விரிவாக எடுத்துக்கூறினார்.
மண் மாதிரி எடுக்கும் முறைகள், கலர் நிலம், உவர் நிலம், மண்ணில் மின் கடத்தும் திறன், நீர் பரிசோதனைக்கு எடுக்கும் முறைகள், கோடை உழவு, அடியுரம், ரகம், பருவம், விதை நேர்த்தி, வரிசை விதைப்பு, நுண்ணுாட்டம் விடுதல், டி.ஏ.பி., கரைசல், பயறு ஒண்டர், இலைவழி, நுண்ணுாட்டம், களை நிர்வாகம் பயிர் எண்ணிக்கை பராமரித்தல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி விரிவாக எடுத்துக்
கூறினார். ஓய்வு பெற்ற துணை வேளாண்மை அலுவலர் வைத்தியலிங்கம், அறுவடை மற்றும் அறுவடை பின் செய் நேர்த்தி, வெங்காயம், மரவள்ளி பயிர்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். பயிற்சியில் வேளாண்மை அலுவலர் புகழ்வேந்தன், துணை வேளாண்மை அலுவலர் சக்திவேல், உதவி வேளாண்மை அலுவலர் அமர்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.