/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில்சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

ADDED : பிப் 20, 2025 01:36 AM
எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில்சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
எருமப்பட்டி:எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, 4,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், பெரும்பாலான குடியிருப்புகளில் சாக்கடை வசதி இல்லாத பகுதியாக உள்ளது. இந்நிலையில், டவுன் பஞ்., பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 7.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதேபோல், எருமப்பட்டி டவுன் பஞ்., கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 7.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதுடன், சுத்திகரிப்பு நிலையம் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள கோம்பையில் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கோம்பை பகுதியில் அமைத்தால், அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் எனவும், அனைத்து வார்டுகளுக்கும் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, நேற்று எருமப்பட்டி டவுன் பஞ்., கோம்பை பகுதியில் மக்கள் மனு கொடுக்க வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து பகுதியில், 20 சதவீத பகுதிகளில் மட்டுமே சாக்கடை வசதி உள்ளது. இந்த நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 7.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தேவையில்லாதது. முதலில், வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை அமைத்து கொடுக்கட்டும். தற்போது அமைக்கப்பட உள்ள இந்த சுத்திகரிப்பு நிலையத்தால் விவசாய நிலம், குடிநீர் போர்வெல் பாதிக்கும். எனவே இந்த திட்டம் தேவைதானா என்பதை ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.