/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கும்மிருட்டான காவிரி சுரங்கப்பாதைவழிப்பறி அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
கும்மிருட்டான காவிரி சுரங்கப்பாதைவழிப்பறி அச்சத்தில் வாகன ஓட்டிகள்
கும்மிருட்டான காவிரி சுரங்கப்பாதைவழிப்பறி அச்சத்தில் வாகன ஓட்டிகள்
கும்மிருட்டான காவிரி சுரங்கப்பாதைவழிப்பறி அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 04, 2025 01:25 AM
கும்மிருட்டான காவிரி சுரங்கப்பாதைவழிப்பறி அச்சத்தில் வாகன ஓட்டிகள்
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள பல மின்விளக்கு கள் எரியாமல் உள்ளன. இதனால், இரவு நேரத்தில் சுரங்கப்பாதை வழித்தடம் கும்மிருட்டாக காணப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை வழித்தடத்தில், ஏற்கனவே, வழிப்பறி சம்பவங்கள் அதிகளவு நடந்துள்ளதால், இரவு, 10:00 மணிக்கு மேல் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். இந்த வழியாக புதிதாக வருபவர்
களுக்கு, பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, காவிரி பகுதியை சேர்ந்த செல்வம் கூறியதாவது: காவிரி ரயில்வே சுரங்கப்பாதையில் உள்ள மின் விளக்குகள், பல மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவில் டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லை. சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, பழுதான மின் விளக்குகளை சரி செய்து இரவில் எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.