/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆர்.ஐ.,யை தாக்கிய முன்னாள்பஞ்., துணைத் தலைவர் கைது
/
ஆர்.ஐ.,யை தாக்கிய முன்னாள்பஞ்., துணைத் தலைவர் கைது
ஆர்.ஐ.,யை தாக்கிய முன்னாள்பஞ்., துணைத் தலைவர் கைது
ஆர்.ஐ.,யை தாக்கிய முன்னாள்பஞ்., துணைத் தலைவர் கைது
ADDED : மார் 07, 2025 02:44 AM
ஆர்.ஐ.,யை தாக்கிய முன்னாள்பஞ்., துணைத் தலைவர் கைது
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம், சத்யாநகர் பகுதியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், வட்ட வழங்கல் ஆர்.ஐ.,யை தாக்கிய, முன்னாள் பஞ்., துணைத்தலைவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், மல்ல சமுத்திரம் ஒன்றியம், மேல்முகம் பஞ்., சத்யாநகர் பகுதியில், நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடந்தது. அமைச்சர் மதிவேந்தன் உட்பட, பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், தி.மு.க.,வை சேர்ந்த மல்லசமுத்திரம் மேல்முகம் முன்னாள் பஞ்., துணைத்தலைவர் குமரேசன், 45, ஒரு மூதாட்டியின் மனுவை, திருச்செங்கோடு வட்ட
வழங்கல் ஆர்.ஐ., திருமாறனிடம் அளித்துள்ளார்.மனுவை பூர்த்தி செய்யும் நபர்களிடம் அளித்து, பூர்த்தி செய்து தரும்படி குமரேசனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னாள் பஞ்., துணைத்தலைவர் குமரேசன், 'நீ எதற்கு இங்கே இருக்கிறாய்' என ஒருமையில் பேசியுள்ளார். இதனால், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆர்.ஐ.,திருமாறனின் சட்டையை, குமரேசன் பிடித்து இழுத்து கன்னத்தில் பலமாக தாக்கியுள்ளார். பின்னர், அதிகாரிகள் இருவரையும் சமரசம் செய்தனர்.
ஆர்.ஐ., திருமாறன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, ஆர்.ஐ.,திருமாறன் அளித்த புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, முன்னாள் பஞ்., துணைத்தலைவர்
குமரேசனை கைது செய்தனர்.