/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோடைகால குடிநீருக்காக ஓடப்பள்ளிதடுப்பணையில் தண்ணீர் தேக்கி வை
/
கோடைகால குடிநீருக்காக ஓடப்பள்ளிதடுப்பணையில் தண்ணீர் தேக்கி வை
கோடைகால குடிநீருக்காக ஓடப்பள்ளிதடுப்பணையில் தண்ணீர் தேக்கி வை
கோடைகால குடிநீருக்காக ஓடப்பள்ளிதடுப்பணையில் தண்ணீர் தேக்கி வை
ADDED : மார் 07, 2025 02:46 AM
கோடைகால குடிநீருக்காக ஓடப்பள்ளிதடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைப்பு
பள்ளிப்பாளையம்:பராமரிப்பு பணிகள் முடிந்து, மீண்டும் ஓடப்பள்ளி தடுப்பணை நீர் தேக்கம் பகுதியில், கோடை காலத்திற்கு தேவையான குடிநீருக்கு, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம் அருகே ஓடப்பள்ளி பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை நீர் தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 9 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைத்து, மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தடுப்பணை நீர் தேக்க பகுதியான ஆவத்திபாளையம் பகுதியில் இருந்து, தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு
வருகிறது.கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், ஓடப்பள்ளி தடுப்
பணையில், முழு கொள்ளளவு தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டு கடல்போல் காணப்பட்டது. தண்ணீர் வரத்து அடிப்படையில் மின் உற்பத்தி ஏற்றம், இறக்கத்துடன் காணப்படும். சில மாதங்களாக, காவிரி ஆற்றில் குடிநீருக்கு மட்டும் தண்ணீர் வருகிறது. குறைவான தண்ணீர் வரத்தால் மின்
உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் கடந்த மாதம், 18 முதல், தடுப்பணை நீர் தேக்கம் பகுதியில் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. இதனால் தடுப்பணையில் இருந்து தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டதால், அந்த இடம் பாறைகளாக தெரிந்தது.
இந்நிலையில், தடுப்பணையில் பராமரிப்பு பணி முடிந்து விட்டதால், நேற்று முதல் மீண்டும் தடுப்பணையில் கோடை காலத்திற்கு குடிநீருக்கு தேவையான அளவு குடிநீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.