/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மாணவர், ஆசிரியர் பாதுகாப்புக்காக தேர்வுஅறையில் 'சிசிடிவி' கேமரா பொருத்தணும்'

ADDED : மார் 23, 2025 01:09 AM
'மாணவர், ஆசிரியர் பாதுகாப்புக்காக தேர்வுஅறையில் 'சிசிடிவி' கேமரா பொருத்தணும்'
நாமக்கல்:'மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, அரசு பொதுத்தேர்வு நடக்கும் அனைத்து அறைகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் நேர்மையாக நடப்பதை உறுதி செய்யவும், ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், பொதுத்தேர்வு நடக்கும் அனைத்து பள்ளிகளின் தேர்வு அறைகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத் தில், ஒரு பள்ளியில் பிளஸ் 2 தேர்வு நடந்தபோது, அறை கண்காணிப்பாளராக இருந்த முதுகலை ஆசிரியர் மீது, மாணவி பாலியல் புகார் கொடுத்ததால், ஆசிரியர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத்தேர்வு அறையில் நடந்ததாக கூறப்படும் இது போன்ற புகார்கள், அது சார்ந்த உண்மை நிலவரத்தை அறிவதற்கும், பொதுத்தேர்வு எழுதும் அறையில் நடக்கக்கூடிய உண்மையான நிகழ்வுகள் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்படுவதற்கும், கேமராக்கள் பொருத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பொதுத்தேர்வு நடக்கும் அறையில், விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் மாணவ, மாணவியரை கண்டித்தால், அறை கண்காணிப் பாளராக உள்ள ஆசிரியர் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகளை சொல்வதும், அவரை மிரட்டுவதும், பள்ளியில் நிறுத்தி இருக்கக்கூடிய அவரது வாகனத்தை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் தற்போது அரங்கேறி வருகிறது. இதில் உண்மை கண்டறிந்த பின், ஆசிரியர் மீது, கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.