/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பா.ஜ., நிர்வாகி வீடுகளின் முன்கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
/
பா.ஜ., நிர்வாகி வீடுகளின் முன்கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
பா.ஜ., நிர்வாகி வீடுகளின் முன்கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
பா.ஜ., நிர்வாகி வீடுகளின் முன்கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 23, 2025 01:27 AM
பா.ஜ., நிர்வாகி வீடுகளின் முன்கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ராசிபுரம்:ராசிபுரம் பகுதியில், பா.ஜ., நிர்வாகிகள் தங்களது வீட்டிற்கு முன்புறம் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க., சார்பில் பாராளுமன்ற தொகுதி மறுவரை குறித்து கூட்டு நடவடிக்கை குழு கூட்டம், 22ம் தேதி நடக்கும் என, தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடக்கும் என, மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதன்படி ராசிபுரம் பகுதியில், பா.ஜ. நிர்வாகிகள் அவரவர் வீட்டிற்கு முன் கருப்பு கொடி ஏந்தி கோஷமிட்டனர்.
மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் சேதுராமன், ஹரிஹரன், மண்டல தலைவர் வேலு, மாவட்ட நிர்வாகி இளங்கோ, குமார், பாஸ்கர், மாநில நிர்வாகி லேகேந்திரன், கார்த்தீஸ்வரன் உள்ளிட்டோர் அவரவர் வீடுகளுக்கு முன் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
* நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.,வினர், தங்களது வீடுகளில், தி.மு.க., அரசை கண்டித்து, கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன், தனது வீட்டு முன் கருப்பு கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மாநகர தலைவர் தினேஷ், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதேபோல், புதுச்சத்திரம் ஒன்றிய தலைவர் செல்வம் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
* வெண்ணந்துார் பகுதியில் உள்ள, பா.ஜ., ஒன்றிய தலைவர் திவ்யா தலைமையில், பா.ஜ.,வினர் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.