/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ரூ.17.75 லட்சத்திற்கு விற்பனை
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ரூ.17.75 லட்சத்திற்கு விற்பனை
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ரூ.17.75 லட்சத்திற்கு விற்பனை
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ரூ.17.75 லட்சத்திற்கு விற்பனை
ADDED : பிப் 13, 2025 01:39 AM
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ரூ.17.75 லட்சத்திற்கு விற்பனை
நாமக்கல்:எலச்சிபாளையம், உஞ்சனையில் செயல்படும் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் எள், தேங்காய் பருப்பு, நிலக்கடலை பருப்பு, கொள்ளு, பாசிப்பயறு, உளுந்து மற்றும் ஆமணக்கு ஏலம் நடக்கிறது.
அதன்படி, நேற்று முன்தினம் நடந்த மறைமுக ஏலத்தில், விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஏலத்தில், 88 விவசாயிகள், 9,584 கிலோ எள் அறுவடை செய்து கொண்டு வந்திருந்தனர். அவை, ஒரு கிலோ, குறைந்தபட்சம், 158 ரூபாய், அதிகபட்சம், 200.90 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 17 லட்சத்து, 75,707 ரூபாய்க்கு விற்பனையானது.
அதேபோல், ஏழு விவசாயிகள், 313 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வந்திருந்தனர். அவை, குறைந்தபட்சம், 124.90 ரூபாய், அதிகபட்சம், 141.10 ரூபாய் என, மொத்தம், 39,910 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இரண்டு விவசாயிகள் கொண்டு வந்த, 2,099 கிலோ ஆமணக்கு, அதிகபட்சம் ஒரு கிலோ, 64.60 ரூபாய் என, மொத்தம், ஒரு லட்சத்து, 35,595 ரூபாய்க்கு விற்பனையானது. 3 விவசாயிகள் கொண்டு வந்த, 916 கிலோ உளுந்து, குறைந்தபட்சம், 67 ரூபாய், அதிகபட்சம், 75.19 ரூபாய் என, மொத்தம், 64,739 ரூபாய்க்கு வர்த்தகமானது.