/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் யூனியனில் பள்ளி செல்லா குழந்தைகள் 81 பேர் கண்டுபிடிப்பு: மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

ADDED : ஜன 22, 2025 01:24 AM
நாமக்கல் யூனியனில் பள்ளி செல்லா குழந்தைகள் 81 பேர் கண்டுபிடிப்பு: மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
நாமக்கல்,:பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில், நாமக்கல் ஒன்றியத்தில், கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் உமா அறிவுரைப்படி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வழிகாட்டுதல்படி, நாமக்கல் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள், 81 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களை பள்ளியில் சேர்க்கும்
கள ஆய்வு பணி, நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட குறவர் காலனியில், நேற்று நடந்தது. அங்கு, நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை தராத மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கற்பகம் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, 6, 7, 8ம் வகுப்புகளில், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை புரியாமல் இருந்த, 20 மாணவர்களை, அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு வீடு வீடாக சென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து, 'நாளை (இன்று) முதல், அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு அனுப்புவதாக' பெற்றோர் உறுதியளித்தனர். மேலும், கும்பகோணம் பகுதியில் இருந்து புதியதாக புலம் பெயர்ந்த இரண்டு குழந்தைகளை, பெரியபட்டி பஞ்., தொடக்கப்பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
கள ஆய்வு பணியில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சசிராணி, மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணலட்சுமி, ஆசிரியர் பயிற்றுனர்கள் கவிதா, கோமதி, கோகிலா, பிரியதர்ஷினி, ரவிக்குமார், தனபால், நிஜாம், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.