தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஊதியம் வழங்கப்படாததால் சி.இ.ஓ., அலுவலகம் முற்றுகை

ஊதியம் வழங்கப்படாததால் சி.இ.ஓ., அலுவலகம் முற்றுகை

ஊதியம் வழங்கப்படாததால் சி.இ.ஓ., அலுவலகம் முற்றுகை


ADDED : அக் 04, 2024 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊதியம் வழங்கப்படாததால்

சி.இ.ஓ., அலுவலகம் முற்றுகை

நாமக்கல், அக். 4-

ஊதியம் வழங்காததை கண்டித்து, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை நேற்று ஆசிரியர் பயிற்றுனர்கள் முற்றுகையிட்டனர்.

அனைத்து வகையான பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இது குறித்து சங்கத்தினர் கூறியதாவது: நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் செயல்படும், அனைவருக்கும் கல்வித் திட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில், ஆசிரியர் பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், கணக்காளர்கள் பணியாற்றி வருகிறோம்.

எங்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம், வழக்கமான தினத்தில் வழங்கப்படவில்லை. அதற்கான காரணத்தையும் அதிகாரிகள் தெளிவாக கூற மறுக்கின்றனர். தற்போது அக்.,3 தேதியாகி விட்ட நிலையில், ஊதியம் குறித்த தகவல் இல்லாததால் கவலையடைந்துள்ளோம்.

எங்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us