/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாய்களை பிடிக்க கூண்டுகள் அமைப்பு
/
நாய்களை பிடிக்க கூண்டுகள் அமைப்பு
ADDED : ஜன 10, 2025 01:24 AM
நாய்களை பிடிக்க கூண்டுகள் அமைப்பு
சேந்தமங்கலம் : கொல்லிமலை குண்டூர் நாடு பஞ்.,ல், ஆடுகளை கடிக்கும் நாய்களை பிடிக்க வனத்துறையின் சார்பில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
கொல்லிமலையில் உள்ள குண்டூர் நாடு பஞ்.,ல், சில நாட்களாக, பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடுகளை, நாய்கள் கடித்து வருவது தொடர் கதையாக உள்ளது. இதனால், விவசாயிகள் ஆடுகளுக்கு பாதுகாப்பாக பட்டிகளில் படுத்து துாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், குண்டூர் நாடு பஞ்., பள்ளிக்காடு மலை கிராமத்தில், நேற்று அதிகாலை பட்டியில் புகுந்து ஏழு ஆடுகளை நாய்கள் கடித்ததில், அனைத்தும் உயிரிழந்தன. இதையடுத்து, குண்டூர் நாடு மலை கிராமத்தில் ஆட்டுப்பட்டி உள்ள மூன்று இடங்களில் வனத்துறையினர் நாய்களை பிடிப்பதற்காக, மூன்று நவீன கூண்டுகள் வைத்துள்ளனர்.

