/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வைகுண்ட ஏகாதசியையொட்டிஅரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
/
வைகுண்ட ஏகாதசியையொட்டிஅரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டிஅரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டிஅரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
ADDED : ஜன 11, 2025 01:38 AM
வைகுண்ட ஏகாதசியையொட்டிஅரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
நாமக்கல்: வைகுண்ட ஏகாதசியையொட்டி, நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கடும் குளிரிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மலையின் கிழக்கு புறம், அரங்கநாயகி தாயார் உடனுரை அரங்கநாதர் கோவில் உள்ளது. 17ம் நுாற்றாண்டில், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு புராண சிறப்பு பெற்றது.
இங்கு, கார்கோடகன் என்ற பாம்பின் மீது அனந்த சயனக் கோலத்தில், அரங்கநாதர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும், வைகுண்ட ஏகாதசி நாளில், இக்கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும். பல்வேறு கோவில்களில், வைகுண்ட ஏகாதசியன்று, சுவாமி உற்சவர் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்புரிவார்.
நாமக்கல்லில், சுவாமியின் ஜடாரி மட்டுமே சொர்க்கவாசல் வழியாக எடுத்து வருவது சிறப்பு. இந்தாண்டு வைகுண்ட ஏகாதசியையொட்டி, நேற்று அதிகாலை, 4:15 மணிக்கு, கோவில் பட்டாச்சாரியார்கள் சொர்க்கவாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து, ஆகம விதிகள்படி, 'சொர்க்க வாசல்' எனும் பரமபத வாசல் வழியாக, சுவாமியின் ஜடாரி எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதையடுத்து, சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலை முதல் கடும் பனியிலும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் மல்லிகா, சீனிவாசன், செல்வ சீராளன், ரமேஷ்பாபு, ஹிந்து சமய அற நிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நாமக்கல் மெயின் ரோடு, கோட்டை ரோடு பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.