/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரத்தசோகை நோயால் கோழிகள் இறக்க வாய்ப்பு
/
ரத்தசோகை நோயால் கோழிகள் இறக்க வாய்ப்பு
ADDED : ஜன 18, 2025 01:18 AM
ரத்தசோகை நோயால் கோழிகள் இறக்க வாய்ப்பு
நாமக்கல்,:'ரத்தசோகை நோயால் கோழிகள் இறக்க வாய்ப்புள்ளது' என, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே, 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்சம், 68 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்பட்டது. அடுத்த ஐந்து நாட்
களுக்கு, வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை மற்றும் 20ம் தேதியில் மாவட்டத்தின் சில இடங்களில் மிதமானது முதல், கனமழை பெய்யும். பகல் வெப்பம், 80.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மிகாமலும், இரவு வெப்பம், 66.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் கிழக்கிலிருந்து மணிக்கு, -12 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
கடந்த வாரம், இறந்த கோழிகளை, கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், பெரும்பாலும் இறக்கை அழுகல் மற்றும் ரத்தசோகை நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, பண்ணையாளர்கள், கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில், நுண்ணுயிர் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோகாக்கஸ், ஈகோலை ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா என பரிசோதனை செய்து, அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.