/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நைனாமலையில் துணி பைகளைபயன்படுத்த கலெக்டர் அறிவுரை
/
நைனாமலையில் துணி பைகளைபயன்படுத்த கலெக்டர் அறிவுரை
ADDED : பிப் 08, 2025 12:46 AM
நைனாமலையில் துணி பைகளைபயன்படுத்த கலெக்டர் அறிவுரை
நாமக்கல், : நாமக்கல் அடுத்த நைனாமலையில் சாலை அமைக்கும் பணியை, கலெக்டர் உமா, நேற்று ஆய்வு செய்தார். அப்போது, நைனாமலை அடிவாரத்தில் உள்ள சிறு கடைகளில் பாலித்தீன் பைகளை பயன்படுத்துகின்றனரா என, சோதனையிட்டார். மேலும், சுற்றுப்புறத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் துணி பைகளை மட்டுமே பயன்படுத்துமாறு கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மின்னாம்பள்ளியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்து, கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை பார்வையிட்டார். ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், பொன் குறிச்சியில் புதிதாக வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும், 85.ஆர்.குமாரபாளையம் பகுதியில் காஸ் பங்க் அமையவுள்ள இடத்தையும் ஆய்வு செய்தார்.