/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ADDED : பிப் 08, 2025 12:48 AM
வெண்ணந்துார் : ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், உள்ளடங்கிய கல்வித்திட்டம் சார்பில், வெண்ணந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வட்டார வளமையத்தில், பிறப்பு முதல், 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.
தலைமையாசிரியர் நடராஜன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுந்தரராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில், பல்வேறு மருத்துவர்கள், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை வழங்கல், புதுப்பித்தல், பஸ் பாஸ், ரயில் பாஸ், தீவிர பாதிப்புள்ள குழந்தைகளுக்கான உதவித்தொகை மற்றும் அறுவை சிகிச்சைக்கான பரிந்துரை செய்யப்பட்டது. 74
மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் செய்திருந்தனர்.