/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுவாமி விவேகானந்தா பார்மசிகல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
/
சுவாமி விவேகானந்தா பார்மசிகல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
சுவாமி விவேகானந்தா பார்மசிகல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
சுவாமி விவேகானந்தா பார்மசிகல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
ADDED : பிப் 13, 2025 01:36 AM
சுவாமி விவேகானந்தா பார்மசிகல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
திருச்செங்கோடு:திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா பார்மசி கல்லுாரியில், தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு நடந்தது. சேர்மன் கருணாநிதி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் முருகானந்தன் வரவேற்றார். ஆராய்ச்சி இயக்குனர் பாலகுருநாதன், குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
கருத்தரங்கில், புதிதாக தோன்றும் நோய்கள், அதற்கான நவீன மருத்துவ சோதனை, மருந்து தயாரிப்பு முறை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், ஆன்ட்டிபயாட்டிக் மருந்து எவ்வாறு உபயோகிப்பது, மருத்துவர் ஆலோசனையின்றி மருந்து எடுத்துக்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
'மருந்து கம்பெனிகள் எவ்வாறு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றன. ஒரு மருந்து வெளிவர எவ்வளவு சோதனை, ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன' என்பது குறித்து, பெங்களூரு, சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வல்லுனர்கள் பேசினர். 13 கல்லுாரிகளை சேர்ந்த, 400 மாணவ, மாணவியர், 45 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அதில் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. துறை தலைவர் சுதாகர் உள்ளிட்ட பேராசிரியர்கள் வாழ்த்தி பேசினர்.