தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கட்சி கொடி கம்பத்தைவிற்றதாக பா.ஜ., ஆர்ப்பாட்டம்

கட்சி கொடி கம்பத்தைவிற்றதாக பா.ஜ., ஆர்ப்பாட்டம்

கட்சி கொடி கம்பத்தைவிற்றதாக பா.ஜ., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 18, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கட்சி கொடி கம்பத்தைவிற்றதாக பா.ஜ., ஆர்ப்பாட்டம்

ப.வேலுார்:-ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்த கட்சி கொடி கம்பங்களை, கடந்த லோக்சபா தேர்தலின்போது தேர்தல் விதிமுறைகள்படி, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் அகற்றியது. அதனை, அலுவலக வளாகத்தில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் அகற்றிய கொடிக்கம்பங்களை பழைய இரும்பு கடைக்கு விற்பனை செய்ததாக கூறி, நேற்று காலை, 11:00 மணிக்கு பா.ஜ., - பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், பரமத்தி ஒன்றிய பா.ஜ., தலைவர் அருண், கபிலர்மலை ஒன்றிய தலைவர் வரதராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் வடிவேல், கார்த்திக், நவலடி, பழனியப்பன், ப.வேலுார் பா.ம.க., நகர செயலாளர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

தொடர்ந்து, மதியம், 1:00 மணிக்கு, புகார் மனு மீது ப.வேலுார் போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, காந்தி சிலை முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால், பா.ஜ.,வினர், 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us