/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
/
காளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
ADDED : பிப் 19, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
குமாரபாளையம்:குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர் திருவிழாவையொட்டி, பூச்சாட்டு விழா நடந்தது. இதையொட்டி, காவிரி ஆற்றில் தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. 25ல் மறு பூச்சாட்டு, 26ல் கொடியேற்றம், மார்ச், 4ல் தேர்கலசம் வைத்தல், இரவு காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல் நடக்கிறது. 5ல் பூ மிதித்தல், 6ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, 7ல் தேர் நிலை நிறுத்துதல், வாண வேடிக்கை, அம்மன் திருவீதி உலா, 8ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, 9ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா நடக்கிறது.