/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுநீர் கசிவு நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை
/
சிறுநீர் கசிவு நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை
ADDED : பிப் 20, 2025 01:33 AM
சிறுநீர் கசிவு நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை
நாமக்கல்:சிறுநீர் கசிவு நோயும், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் உள்ள ஆதிரா கிட்னி கேர் மருத்துவமனை டாக்டர்கள் அருண்குமார் செங்கோட்டையன், சரண்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேள்வி, பதில்கள் வருமாறு:-சிறுநீர் அடங்காமை (சிறுநீர் கசிவு) என்றால் என்ன?
சிறுநீர் நம் கட்டுப்பாட்டை இழந்து, சிறுநீர் கசிவிற்கு வழிவகுப்பதே சிறுநீர் அடங்காமை எனப்படும்.
அடையாளம் மற்றும் அறிகுறிகள் என்ன?
இருமும் போதோ அல்லது தும்பல் மற்றும் சிரிக்கும் போதோ சிறுநீர் கசிவு ஏற்படுதல். கழிவறை செல்லும் முன் சிறுநீர் கசிவு ஏற்படுதல், சிறுநீர் சிறு துளிகளாக கழித்தல், படுக்கையில் சிறுநீர் கழித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
யாரை பாதிக்கும்?இது பெரும்பாலும் முதியோர், குறிப்பாக பெண்களிடத்தில் ஏற்படுகிறது. மேலும், நரம்பு மண்டலம் பாதிப்பு இருப்பவர்கள், முதுகு தண்டு பாதிப்பு இருப்பவர்கள் பாதிக்கப்படலாம்.
எதனால் ஏற்படுகிறது?சிறுநீர் பையிலிருந்து, தசைகளால் சிறுநீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த முடியாதபோது இவ்வாறு நிகழ்கிறது. சிறுநீர் பாதையை சுற்றி இருக்கும் தசைகளில் தளர்வு ஏற்படும்போது ஏற்படும். சிறுநீர் பையில் சுழற்சி, புரோஸ்டேட் பாதிப்பு வீக்கம், கிருமி தொற்று, சிறுநீர் பையை கட்டுப்படுத்தும் நரம்புகளில் பாதிப்பு. மூளையில் ரத்தக்கசிவு, சிறுநீர் பாதை தொற்றுக்கல் போன்ற பாதிப்புகளால் ஏற்படும்.
கண்டறியும் முறை?பரிசோதனைகள் மூலம் இதன் தீவிரத்தை நாம் கண்டறிய முடியும். மூன்று அல்லது ஐந்து நாட்கள் நீர் எடுக்கும் அளவு, சிறுநீர் கழிக்கும் அளவு முறை, சிறுநீர் கசிவு ஆகியவற்றை ஆவணப்படுத்துதல். சிறுநீர் சோதனை, யு.எஸ்.ஜி., ஸ்கேன் மற்றும் மீதமுள்ள சிறுநீரை கண்டறியும் சோதனை. சிஸ்டோகிராம் சி.டி., பரிசோதனை, சிஸ்டோகோபி சிறுநீர் பையில் கேமரா வைத்து
பரிசோதனை செய்தல். சிறுநீர் சுரக்கும் தசைகள், தாங்கக்
கூடிய அழுத்தத்தின் அளவை மதிப்பிட உதவுகிறது. சிறுநீர் கசிவு பிரச்னையின் தீவிரத்தை பொறுத்து இவைகள் மூலம் பரிசோதனை தேவைப்படலாம்.
சிகிச்சை முறைகள் எவை?வாழ்க்கை முறை மாற்றம், மிகவும் பாதிப்பு குறைவாக இருப்பவர்கள் இதன் மூலம் பயன்பெறலாம். உடற் பயிற்சி, உடல் எடை அதிகமாக இருந்தால் குறைக்க வேண்டும். தண்ணீர் எடுக்கும் முறையை சீர்படுத்துதல்.
இவைகள் சரியான பலன் அளிக்காதபட்சத்தில், மருத்துவ முறையின் மூலமும் அறுவை சிகிச்சை மூலமும் சரியான சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

