ADDED : பிப் 20, 2025 01:33 AM
அ நிறம் | அளவு
சிதிலமடைந்த சமுதாயகூடம்சீரமைக்க மக்கள் வேண்டுகோள்
எலச்சிபாளையம்:கொன்னையார் கிராமத்தில் சிதிலமடைந்த சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் சமுதாயகூடம் கட்டப்பட்டது.
சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள், தங்களது இல்லங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளை இந்த சமுதாய கூடத்தில் நடத்தி வந்தனர்.
தற்போது, இந்த சமுதாய கூடத்தின் கான்கரீட் உதிர்ந்து வருகிறது. இதனால், இங்கு வரும் பொதுமக்கள் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் வந்து செல்கின்றனர்.
எனவே, சிதிலமடைந்து காணப்படும் சமுதாய கூடத்தை புனரமைப்பு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
