/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
/
மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
ADDED : பிப் 20, 2025 01:33 AM
மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
குமாரபாளையம்:குமாரபாளையம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழாவையொட்டி, பாண்டுரங்கர் கோவிலில் சீர்வரிசை பெறும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில், சமயபுரம் மாரியம்மனுக்கு பாண்டுரங்கர் வழங்குவதுபோல் சீர்வரிசை வழங்கப்பட்டது. இதில் மஞ்சள், குங்குமம், பழங்கள், புடவை, வளையல், பூக்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் பாண்டுரங்கர் கோவிலிலிருந்து ஊர்வலமாக சீர்வரிசை தட்டுக்களுடனும், பூக்கள் கூடையுடனும் சென்றனர்.
விட்டலபுரி, சேலம் சாலை, ராஜா சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக, இடைப்பாடி சாலையில் உள்ள கோவிலில் ஊர்வலம் நிறைவடைந்தது. தொடர்ந்து, சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

