தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு'மறைதிறவு' அணுகுமுறை பயிற்சி

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு'மறைதிறவு' அணுகுமுறை பயிற்சி

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு'மறைதிறவு' அணுகுமுறை பயிற்சி


ADDED : பிப் 20, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு'மறைதிறவு' அணுகுமுறை பயிற்சி

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் வட்டார வளமையத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் சொல்வளத்தை மேம்படுத்துவதற்கான, 'மறைதிறவு' அணுகுமுறை பயிற்சி நடந்தது.

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் உள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் சொல்வளத்தை மேம்படுத்துவதற்கான, 'மறைதிறவு' அணுகுமுறை என்ற புதுமையான பயிற்சி, நேற்று மல்லசமுத்திரம் வட்டார வளமையத்தில் நடந்தது. இப்பயிற்சியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:

ஆங்கில மொழி உலக மொழியாக இருப்பதால், அதனுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு இப்பயிற்சி உகந்ததாக இருக்கும். அயல்மொழி வார்த்தைகளுக்கான சொற்பொருளை வழக்குமொழியில் தெரிந்து கொள்ளுதல். மொழியின் சொற்தொகுப்பை அறிய முயற்சித்தல். சொல் உருப்படிகளை தெரிந்துகொள்ளுதல். வினைச்சொற்களின் முக்கியமான அம்சங்களை புரிந்துகொள்ளுதல், மொழியின் வாக்கிய நியமன வடிவங்களை அறிந்துகொள்ளும்போது, எந்த ஒரு அயல் மொழியையும் பயன்படுத்தும் ஆற்றல் ஒருவருக்கு வந்துவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு சொல்வளத்தை மேம்படுத்த உதவும் கட்டகம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சுமதியால் வடிவமைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு ஆங்கில வார்த்தைக்கு உரிய தமிழ்ச்சொல், பட விளக்கம் மற்றும் அச்சொல்லின் ஆங்கில வாக்கியம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் ஆங்கிலத்தில் சொல்வளத்தை மேம்படுத்த பல செயல்பாடுகளை ஆசிரியர்களுக்கு கொடுத்து எளிதாக ஆங்கிலத்தில் பேசும் திறனையும், தொடர்பு கொள்ளும் திறனையும் மேம்படுத்தினர்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us