/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அலங்காநத்தம் செல்லும் சாலைபணியை விரைந்து முடிக்கலாமே
/
அலங்காநத்தம் செல்லும் சாலைபணியை விரைந்து முடிக்கலாமே
அலங்காநத்தம் செல்லும் சாலைபணியை விரைந்து முடிக்கலாமே
அலங்காநத்தம் செல்லும் சாலைபணியை விரைந்து முடிக்கலாமே
ADDED : பிப் 21, 2025 01:17 AM
அலங்காநத்தம் செல்லும் சாலைபணியை விரைந்து முடிக்கலாமே
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், அலங்காநத்தம் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை அமைக்கும் பணியை, விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
எருமப்பட்டி யூனியன், அலங்காநத்தம் பிரிவு அருகில் இருந்து, அலங்காநத்தம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை தினமும், 500க்கும் மேற்பட்ட மக்கள் நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்ல பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல், அலங்காநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும், 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலை கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்தவாறு குண்டும் குழியுமாக இருந்தது. இதனால், சாலையை சரி செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன், தார் சாலை அமைக்கும் பணிக்காக சாலையை வெட்டி ஜல்லிகள் கொட்டிய நிலையில், அப்படியே விடப்பட்டுள்ளதால், இந்த பகுதியில் செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே,
ஜல்லிகள் கொட்டிய சாலையில், பணியை விரைந்து முடிக்க வேண்டும்.