/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோடு யூனியனில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
திருச்செங்கோடு யூனியனில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருச்செங்கோடு யூனியனில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருச்செங்கோடு யூனியனில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : பிப் 22, 2025 01:37 AM
திருச்செங்கோடு யூனியனில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
விவசாயி வேலுமணி, சவுதாபுரம்: ஓடை புறம்போக்கு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, கடந்த, 2019 முதல் தொடர்ந்து புகாரளித்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் காட்டி தட்டிக்கழிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆர்.டி.ஓ., சுகந்தி: இது சம்பந்தமாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி நடேசன், கொல்லப்பட்டி: திருச்செங்கோடு நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், விவசாய நிலம் வழியாக செல்கிறது. இதனால், கரும்பு, தென்னை விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஆர்.டி.ஓ., சுகந்தி: சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் ஆய்வு செய்யும்போது, அந்த வரைபடத்தில் ரோடு வழியாக கழிவுநீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தங்களது விவசாய நிலத்தில் கழிவுநீர் செல்லும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.