/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளி மாணவர்மலேசியாவிற்கு சுற்றுலா
/
அரசு பள்ளி மாணவர்மலேசியாவிற்கு சுற்றுலா
ADDED : பிப் 23, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பள்ளி மாணவர்மலேசியாவிற்கு சுற்றுலா
குமாரபாளையம்:தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான வானவில் மன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், அறிவியல் கண்காட்சி பிரிவில், குமாரபாளையம் மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் மகத்ராஜ், வெற்றி பெற்று மூன்றாமிடம் பிடித்தார். இதையடுத்து அரசு செலவில் மலேசியா சுற்றுலா செல்ல தேர்வானார். அந்த மாணவரை, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி, நகர்மன்ற உறுப்பினர் செந்தில்குமார், சாய் அறக்கட்டளை தலைவர் வேல்முருகன், தலைமை ஆசிரியை கவுசல்யா மணி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

