ADDED : பிப் 26, 2025 01:22 AM
வரத்து இல்லை; மஞ்சள் ஏலம் ரத்து
நாமகிரிப்பேட்டை:நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. மஞ்சள் சீசன் தை மாதம் இறுதியில் தொடங்கும். ஜனவரி மாதத்தில் அறுவடை தொடங்கி, பிப்ரவரியில் விற்பனைக்கு வரத்தொடங்கும். தொடர்ந்து, எட்டு மாதங்கள் வரை மஞ்சள் வரத்து இருக்கும். பிறகு படிப்படியாக குறைய தொடங்கும்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய மஞ்சள் வரத்து இருக்காது. வியாபாரிகள், விவசாயிகள் தாங்கள் இருப்பு வைத்திருக்கும் மஞ்சளைத்தான் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். மஞ்சள் சீசன் முடிந்ததால் வரத்து குறைந்தது. ஆர்.சி.எம்.எஸ்.,சிற்கு மஞ்சள் வரத்து இல்லாததால், 3வது வாரமாக, நேற்றும் மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. தனியார் மண்டிகளில் சில இடங்களில் மட்டும் புதிய மஞ்சள் விற்பனைக்கு வந்ததால் மஞ்சள் ஏலம் நடந்தது.