/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொங்கண சித்தர் குகையில்குருவார சிறப்பு வழிபாடு
/
கொங்கண சித்தர் குகையில்குருவார சிறப்பு வழிபாடு
ADDED : பிப் 28, 2025 01:47 AM
கொங்கண சித்தர் குகையில்குருவார சிறப்பு வழிபாடு
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் பழமையான கொங்கண சித்தர் குகை அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை குருவார சிறப்பு பூஜை நடக்கிறது. அதன்படி, நேற்று அமாவாசை மற்றும் வியாழக்கிழமையையொட்டி, மதியம், 12:00 மணிக்கு, 16 வகையான மூலிகை திரவியங்களால் சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பெரியமணலி, சின்னமணலி, பாளை யம், எலச்சிபாளையம், மரப்பரை, நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, மேட்டுபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.