ADDED : மார் 03, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தவறி விழுந்து விவசாயி பலி
நாமக்கல்:நாமக்கல் அடுத்த ஆவல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கணேசன், 58. இவர், வீட்டின் அருகே தீவன புல்லை வாங்கி தட்டுப்போர் அடுக்கி வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, அப்பகுதியில் லேசான மழை பெய்தது. இதையடுத்து, தட்டுப்போர் நனையாமல் இருக்க, தார்பாய் கொண்டு மூடும் பணியில் கணேசன் ஈடுபட்டார். அப்போது, திடீரென கால் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை, 6:00 மணிக்கு உயிரிழந்தார். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.