/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து
/
சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து
ADDED : மார் 04, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாரி மோதி விபத்து
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப்பில் இருந்து, பி.டி.ஓ., அலுவலகம் வரை, சில ஆண்டுகளுக்கு முன், 200 மீட்டர் தொலைவிற்கு, சாலை நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. நேற்று, திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்த லாரி ஒன்று, சாலையில் வைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் இருப்பது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரியின் முன்பக்கம் சேதமானது. அடிக்கடி விபத்துக்குள்ளாகும் இப்பகுதியில், சென்டர் மீடியன் தெரியும் வகையில், 'ரிப்ளெக்டர்'கள் வைக்க வேண்டும் அல்லது சென்டர் மீடியனை அகற்ற வேண்டும் என,
அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.